Tuesday, March 30, 2010


ஞாபகத்திலிருந்து விலகுபவர்கள்

நினைவிலிருந்த காதலி
படிமமாய் அலைந்து கொண்டிருக்கிறாள்
புதிய அன்பினை சேகரித்துக்கொண்டு
உனக்கென காத்திருக்கிறேன்
சிறு புன்னகையுடன் தாமதத்திற்கான
மன்னிப்பை கோருகிறாய்
உன் இடுக்குகளில் படிந்த ஈரம்
மெல்லிய வாசனை கிளப்பியும்
பின்புறம் மார்புகள் உரசி
நீ உட்காரும்போழுது
நமது இருசக்கரவாகனம்
வேகத்தை கூட்டுகிறது
நாம் நுழைய இருப்பது
சின்ன சின்ன அறைகளென
வளர்ந்திருக்கும்
சவுக்குமரகாடுகளுக்குள்
கடலின் உப்பு தென்றலாய்
நம் முகத்தில் படிந்ததும்
புலன் படுத்தும் வெளிச்சத்தின் கீழ்
உதிர்ந்த சவுக்கிலைகள் சப்தமிட
உடல் வளைந்து
முத்தமிடும் பொழுது
கொஞ்சம் கடலை சுவைத்து விட்டதாய்
நீ உதிர்த்த சொல் ஒலிக்கிறது
நெருப்பில் சுட்ட பனிக்கட்டிபோல்
ஆடைகளை மறையச் செய்கிறேன்
நினைவிலிருந்த காதலன்
ஒருவனை காட்சிபடுத்தியும்
அவன் புணர்ச்சியின் ஸ்பரிசங்களை
மீட்டெடுப்பதாய் நீ
என்னை இறுக்கும் பொழுது
பெண்ணின் மிச்சமே ஆணென
சர்ப்பமாய் நீள்கிறேன்
விட்டில்கள் ரீங்கரிக்கின்றன
மொழிகளுக்குள் புதையுண்ட
பழம் சொற்களால் எனை அடுக்கியும்
நேர்த்தியான புருவத்தை
எவனிடத்திலும் கண்டதில்லையென
முகத்தில் ஈரம் வரைகிறாய்
குளிர்ந்த ஏரியென என் விரல்கள்
நீ பார்த்திராத உன் பின்புற அழகில்
மெல்ல நீந்தும் பொழுதும்
பெருங்கடலென நீ அசையும் பொழுதும்
உனது காதலர்களும்
எனது காதலிகளும்
மெல்ல ஞாபகத்திலிருந்து விலகுகிறார்கள்
உப்புக் காற்றில் சவுக்கு மரங்கள்
ஒன்றையொன்று
முத்தமிட்டு கொள்கின்றன .

4 comments:

  1. யப்பா! நீ பெரிய்ய ஆளு போல!! கமெண்ட் போடறதுக்கு வேர்ட் வெரிஃபிகேஷன் கேக்குது.அத எடுத்துட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

    ReplyDelete
  2. மிகுந்த போதையில் காதல் நிறைந்த நண்பனின் கவிதையை வாசிப்பது ஆஆஆஹா எத்தனை சுகமான தருணமாக மாறிவிடுகிறது !?

    ReplyDelete
  3. கொஞ்சம் எங்கோ சிறிது சுருதி பேதம் ..சரியா?
    கவிதை போதை

    ReplyDelete
  4. sa.muthuvel annavukkum, veyyilnanbanukkum, and padmavukkum nanrigal pala!

    anbudan
    ursularagav

    ReplyDelete