Sunday, February 28, 2010கிழக்கில் இறந்தவன்

துப்பாக்கியும்
இரண்டு தோட்டாக்களும்
என்னிடம் இருந்தது
ஒன்று
தற்காப்புக்கும்
மற்றொன்று
தற்க்கொலைக்கானது
வடக்கே ஒருவன் நெருங்க
தற்க்காப்பாய்
ஒன்றை இழந்திருந்தேன்
தெற்கே ஒருவன் நெருங்க
ஏதும் செய்ய இயலாமல்
மற்றொன்றின் சப்தம் எழும்பி அடங்க
துப்பாக்கி அந்தரத்தில் தொங்குகிறது
அதற்கிடையில் பார்த்தேன்
மேற்கிலிலிருந்து
ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள்

Tuesday, February 23, 2010ஏழாவது கடவுள்

அனேகம்பேர் காதல் கொள்ளும்
இளம்பெண்ணிற்கு நான்
நாற்பத்தெட்டாவது காதலன்
குறிஞ்சிநில விளிம்பில் வாழும்
பேரழகியான அவளுக்கு
தக்காளி என்ற பெயருமுண்டு
தன்இளம் சகோதரனின்
துரோகத்தால்
நடுக்கமுறும் நாட்களில்
எனது சிறிய அன்பில்
விரல் பிடித்து
நெடுந்தூரம் நடந்தும்
ஏழு கடவுளாலும்
ஆசிர்வதிக்கப்பட்டிருந்தோம்
அவளின் மஞ்சள்நிற புகைப்படமும்
நாற்ப்பத்தேழாவது காதலனின் நட்பும்
கிடைத்திருப்பது துருதிஷ்டமானது
அதீத முத்தங்களுடன்
குறிஞ்சிநில மலர்களில்
எனது சிறிய அன்பினை
சேகரித்துக் கொண்டிருக்கும் வேளையில்
தன் சகோதரர்களின்
பேரன்பினால்
தன்னிலை மறந்திருந்தாள்
அவளை காதலிக்கும்
நாற்பத்தெட்டாவது காதலன்
அதீத முத்தங்களுடன்
மிருதுவான தக்காளிகளை
பெட்டியில் அடுக்குகிறான்
ஏழாவது கடவுளும்
அவனை கைவிட்டிருந்தாள்

Monday, February 22, 2010


வெறி பிடித்த பல்லிகள்தூசு படர்ந்த இருப்பிடத்தை
சுத்தம் செய்து குளிக்கும் அவளின்
உள்ளாடைகள் களவு போகின்றன
கதவிடுக்கில் நிர்வாணம் கண்ட
பல்லியொன்று அவளின்
முலைக்கொத்துகளில் குரூரம் பதிக்கிறது
நனைந்த மேனியுடன் அவள் வெளியேறுகையில்
சன்னலிலிருந்த பட்சியொன்று
அவளின் யோனி கற்றையுடன்
கூடுகளுக்கு விரையும்
புதிய உள்ளாடைகளுக்குள்
தன்னை திணித்துக்கொண்டு
விளம்பர கம்பத்தின் மஞ்சள் ஒளியில்
அவள் புன்னகைக்கிறாள்
கடந்த வருடம் அவளதுடல்
அதிக லாபம் ஈட்டியதாக
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன
அவளின் பெயர் தாங்கிய இளம்பெண்களோ
அதிக திமிரோடு அலைந்ததுகொண்டிருக்க
இப்பொழுதெல்லாம்
இருப்பிடத்தினுள் படர்ந்த தூசுகளை
அகற்றுவதேயில்லை அவள்
பளபளபாகிவரும் அவளுடலின் மீது
பரந்து விரிந்த நிறுவனமொன்று
முதலீடு செய்துள்ளது
முன்னெப்பொழுதையும்விட
மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமவள்
தொடர்ந்து தனது உள்ளாடைகள்
களவுபோவது குறித்து கவலையடைகிறாள்

Monday, February 8, 2010


காணமற்போன சத்யா


பெருத்த மரத்திற்க்கடியில்தான்
சத்யா காணாமல் போயிருந்தாள்
என்விரல் பற்றிதான்
அமர்ந்திருந்தாள்
எதிரே சிறிய நீரோடையும் இருந்தது
சிறிய பாம்பொன்றையும்
காண்பித்தவளும் அவள்தான்
இதழ் உதிர்ந்த மலரை நீட்டியதும்
கடவுளை அருகழைத்து
முரட்டுக் காதலையும் தெரிவித்தாள்
தொலைந்த கணம்
அறியமுடியவில்லை
இதோ
மரத்தின் பின்னால்
முகம்காட்டி மறையும் ஒருத்தியை
சத்யாதான் என்று உறுதிபட
உணரமுடியாதெனினும்
ஊர்ந்தொடும் பாம்பின் சரசரப்பை உணரமுடிகிறது