Tuesday, February 23, 2010







ஏழாவது கடவுள்

அனேகம்பேர் காதல் கொள்ளும்
இளம்பெண்ணிற்கு நான்
நாற்பத்தெட்டாவது காதலன்
குறிஞ்சிநில விளிம்பில் வாழும்
பேரழகியான அவளுக்கு
தக்காளி என்ற பெயருமுண்டு
தன்இளம் சகோதரனின்
துரோகத்தால்
நடுக்கமுறும் நாட்களில்
எனது சிறிய அன்பில்
விரல் பிடித்து
நெடுந்தூரம் நடந்தும்
ஏழு கடவுளாலும்
ஆசிர்வதிக்கப்பட்டிருந்தோம்
அவளின் மஞ்சள்நிற புகைப்படமும்
நாற்ப்பத்தேழாவது காதலனின் நட்பும்
கிடைத்திருப்பது துருதிஷ்டமானது
அதீத முத்தங்களுடன்
குறிஞ்சிநில மலர்களில்
எனது சிறிய அன்பினை
சேகரித்துக் கொண்டிருக்கும் வேளையில்
தன் சகோதரர்களின்
பேரன்பினால்
தன்னிலை மறந்திருந்தாள்
அவளை காதலிக்கும்
நாற்பத்தெட்டாவது காதலன்
அதீத முத்தங்களுடன்
மிருதுவான தக்காளிகளை
பெட்டியில் அடுக்குகிறான்
ஏழாவது கடவுளும்
அவனை கைவிட்டிருந்தாள்

2 comments: