Monday, February 22, 2010


வெறி பிடித்த பல்லிகள்



தூசு படர்ந்த இருப்பிடத்தை
சுத்தம் செய்து குளிக்கும் அவளின்
உள்ளாடைகள் களவு போகின்றன
கதவிடுக்கில் நிர்வாணம் கண்ட
பல்லியொன்று அவளின்
முலைக்கொத்துகளில் குரூரம் பதிக்கிறது
நனைந்த மேனியுடன் அவள் வெளியேறுகையில்
சன்னலிலிருந்த பட்சியொன்று
அவளின் யோனி கற்றையுடன்
கூடுகளுக்கு விரையும்
புதிய உள்ளாடைகளுக்குள்
தன்னை திணித்துக்கொண்டு
விளம்பர கம்பத்தின் மஞ்சள் ஒளியில்
அவள் புன்னகைக்கிறாள்
கடந்த வருடம் அவளதுடல்
அதிக லாபம் ஈட்டியதாக
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன
அவளின் பெயர் தாங்கிய இளம்பெண்களோ
அதிக திமிரோடு அலைந்ததுகொண்டிருக்க
இப்பொழுதெல்லாம்
இருப்பிடத்தினுள் படர்ந்த தூசுகளை
அகற்றுவதேயில்லை அவள்
பளபளபாகிவரும் அவளுடலின் மீது
பரந்து விரிந்த நிறுவனமொன்று
முதலீடு செய்துள்ளது
முன்னெப்பொழுதையும்விட
மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமவள்
தொடர்ந்து தனது உள்ளாடைகள்
களவுபோவது குறித்து கவலையடைகிறாள்

No comments:

Post a Comment