கோடை காலம்
நீண்ட நாட்களுக்கு பிறகு
அவள் இல்லாத நாளில்
உன்னை சந்திக்கிறேன்
எரிந்து போன காயங்களை காட்டி
எல்லைகள் வரவேற்கின்றன
எங்கே அந்த புல்வெளிகள்
அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குள்
உன் அடர்ந்த மரங்களின் இலைகளை காணவில்லை
இப்பொழுது என் பசிக்கு
உன்னிடம் பழங்கள் இல்லை
நீரோடையில் நான் தொலைத்த நாணயத்தை
வெயில் மினுங்க
கண்டெடுத்துவிடுவது ஆச்சரியம்தான்
என் பெயர் பொறித்த தடிமரவட்டை
உதிர்ந்து விழுகிறது என்னோடு
மலர்கள் அற்று நிர்வாணம்
கொண்டிருக்கிறது காப்பிசரிவுகள்
காதலிக்கு கொடுக்க ஒரு காட்டு மலரும்
இல்லாதது எவ்வளவு துக்ககரமானது
இரை தேடிச் சென்ற பட்சிகள்
தொலைந்து போய் விட்டதாய்
இருக்கிறது உன் மௌனம்
இருப்பினும் பச்சை கூம்புகள் கொண்ட
சோற்று கற்றாழைகள்
வளர்ந்திருப்பது நல்ல விசயம்தான்
துயரம் பெருகும் கோடைகாலத்தில்
நான் இங்கு வந்திருக்ககூடாததுதான்
Subscribe to:
Post Comments (Atom)
Arumai Ragav
ReplyDeleteanna,very nice poem .kaathal thathumbi vazhikiradhu "ezhavadhu kadavulai"vida indha kavidhaye enakku migavum pidiththirukkiradhu "எரிந்து போன காயங்களை காட்டி
ReplyDeleteஎல்லைகள் வரவேற்கின்றன"
"இரை தேடிச் சென்ற பட்சிகள்
தொலைந்து போய் விட்டதாய்
இருக்கிறது உன் மௌனம்"
very nicena
தனிமையில், சந்தித்த இடங்களில் போய் சுவாசிப்பது சுகம் தான். வேதனையான சுகம்
ReplyDeletenanri thozi thenammai...
ReplyDeleteday mani unakku nanri thevaiyanu theriyala,
irunthaalum nanrida...
வேதனையான சுகம் thaan thozi nanrigal pala...
anbudan
ursularagav